ColourMedia
WhatsApp Channel
Homeஆன்மீகம்இன்றைய ராசிபலன் - 13.12.2023

இன்றைய ராசிபலன் – 13.12.2023

0Shares

பஞ்சாங்கம்

நாள்சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி புதன்கிழமை 13.12.2023
திதிஅதிகாலை 05.49 வரை அமாவாசை. பின்னர் பிரதமை
நட்சத்திரம்பிற்பகல் 12.18 வரை கேட்டை. பின்னர் மூலம்
யோகம்பிற்பகல் 12.32 வரை சித்தயோகம். பின்னர் மரணயோகம்
நல்லநேரம்காலை: 08.15 முதல் 10.15 மணி வரை
காலை: 09.45 முதல் 10.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
தவிர்க்க வேண்டிய நேரம்

ராகு காலம்: பகல் 12.00 முதல் 01.30 மணி வரை.
எமகண்டம்: காலை 07.30 முதல் 09.00 மணி வரை.
குளிகை: காலை 10.30 முதல் 12.00 மணி வரை.
சூலம்வடக்கு
பரிகாரம்பால்

மேஷ ராசி அன்பர்களே!

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடு படுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். இன்றைய நாளை முருகப்பெருமானை வழிபட்டு தொடங்குவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவேண்டிய நாள். எதிலும் பொறுமை அவசியம். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர் களால் பிரச்னை ஏற்படக்கூடும். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக்கொள்ளலாம்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுன ராசி அன்பர்களே!

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்கள் வகையில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக இருக்கும். துர்கையை வழிபட முயற்சி வெற்றி பெறும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் மகிழ்ச்சி உண்டாகும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது சற்று கவனமாக இருக் கவும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறை வேற்றும் வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். கனிவான அணுகுமுறை அவசியம். இன்று சிவபெருமானை வழிபட காரியங்கள் சாதகமாக முடியும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயமாக சற்று அலைச் சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவுமிருக்காது. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வியாபாரத்தில் பணி யாளர்களால் பிரச்னைகள் ஏற்படும். ஆஞ்சநேயரை வழிபட மன அமைதி உண்டாகும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி அன்பர்களே!

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக் கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும். தட்சிணாமூர்த்தியை வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணைக்காக செலவு செய்யவேண்டி வரும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலா ராசி அன்பர்களே!

காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழி யில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக் கும். அம்பிகை வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதி கரிக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். குலதெய்வ வழிபாடு மகிழ்ச்சி தரும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் உண்டாகும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.

தனுசு ராசி அன்பர்களே!

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருப்பினும் தேவை யற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படும். ஷீர்டி சாய்பாபா வழிபாடு சந்தோஷம் தரும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

மகர ராசி அன்பர்களே!

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைத்து மகிழ்ச்சி தரும். வியாபாரம் வழக்கம் போல நடைபெறும். முருகப்பெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடம் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக் கும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டு. மகாவிஷ்ணுவை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மீனராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணை யால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும். மற்ற வர்களுடன் இணக்கமான அணுகுமுறை அவசியம். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் அதிகமாக இருக்கும். இன்று நன்மைகள் அதிகரிக்க தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;

ColourMedia WhatsApp Channel Invite

https://whatsapp.com/channel/0029VaCLbG1GufJ0P80wW90D

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments