கடந்த ஒக்டோபர் மாதம் பெலிகமுவவில் உள்ள தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் (NLDB) விற்பனை நிலையத்தின் பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 43 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தம்புள்ளை, கப்புவத்தையைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபர், புதன்கிழமை (டிசம்பர் 06) தொட்டலங்கா சேதாவத்தை பகுதியில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அக்டோபர் 26 அன்று, NLDB பெலிகம விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு, 52 வயதான கே.சுவாமிநாதன் என்ற பாதுகாவலரின் சடலம், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில், வாயை இறுக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதனடிப்படையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;