மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் கடுமையான சூறாவளி புயல் “மைச்சாங்” (“மிக்ஜாம்” என உச்சரிக்கப்படுகிறது) அட்சரேகை 15.2°N மற்றும் தீர்க்கரேகை 80.3°E, டிசம்பர் 05 ஆம் தேதி 08:30 மணி நேரத்தில், யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 615கிமீ தொலைவில் அமைந்திருந்தது. இந்த அமைப்பு இன்று (டிசம்பர் 05) 14:30 மணி அளவில் வடக்கு நோக்கி நகர்ந்து தெற்கு ஆந்திரா கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளது. எனவே, கடுமையான சூறாவளி புயலான “மிக்ஜாம்” தீவின் வானிலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;