பம்பலப்பிட்டிய லொரீஸ் வீதியில் சட்டவிரோதமான முறையில் கல்வி நிறுவனமொன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் என கூறப்படும் பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். 24 வயதுடைய சந்தேகநபர் கிரியுல்ல நாரங்கமுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். “Evolve College of Education” என்ற பெயரில் இயங்கும் இந்த நிறுவனம், நாடு முழுவதிலும் உள்ள மாணவர்களை உள்வாங்குவதற்கும், ஆன்லைன் கருத்தரங்குகளை நடத்துவதற்கும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தேவையான டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்கள் போன்ற கல்வித் தகுதிகளை வழங்குவதாக சமூக ஊடக தளங்களில் விளம்பரம் செய்துள்ளது.
எந்தவொரு சட்ட அங்கீகாரமும் இன்றி கல்விச் சேவைகளை வழங்கிய பின்னர், போலியான டிப்ளோமா சான்றிதழ்களையும் நிறுவனம் வழங்கியுள்ளது. குறித்த நிறுவனம் உள்ளூர் அல்லது சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யாமல் இயங்கி வருவதாகவும், பாடத்தின் வகையைப் பொறுத்து ஒவ்வொரு மாணவரிடமிருந்தும் 100,000 மற்றும் ரூ. 445,000 வரையிலான பணத்தை பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த உயர்கல்வி மோசடி தொடர்பாக இதுவரை காவல்துறைக்கு மொத்தம் 43 புகார்கள் வந்துள்ளன. குறித்த நிறுவனம் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் அனுமதியையும் பெறவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 1,000 நபர்கள் இந்த மோசடிக்கு பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது. இதேவேளை, குறித்த நிறுவனத்தின் இணைப் பணிப்பாளராக செயற்பட்டு தற்போது தலைமறைவாகவுள்ள மட்டக்குளியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரை கைது செய்வதற்கான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;