வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள கடையொன்றில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வயோதிப தம்பதியரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடையின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான அறையொன்றில் ஆண் (78) மற்றும் பெண் (68) ஆகிய இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (30) காலை சடலங்களை கண்டெடுத்த உயிரிழந்த தம்பதியினரின் மகன் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை அவர்களுக்கு சொந்தமான சுமார் 05 பவுண் தங்கம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;