‘கோல்டன் கேட் கல்யாணி’ பாலம் என அழைக்கப்படும் புதிய களனி பாலம், (டிசம்பர் 01) முதல் மூன்று கட்டங்களாக மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை (RDA) தெரிவித்துள்ளது.
புதிய களனி பாலத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனத்தை விடுவிப்பதற்கு முன்னர், திட்டத்துடன் தொடர்புடைய சகல பொறுப்புக்களையும் மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அத்தியாவசிய நவீனமயமாக்கல் நடவடிக்கைகளின் காரணமாக புதிய களனி பாலம் பின்வரும் மூன்று கட்டங்களின் கீழ் மூடப்படவுள்ளதுடன், வாகன சாரதிகள் இந்த காலப்பகுதிகளில் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
கட்டம் 01 – காலை 9.00 மணி முதல். டிசம்பர் 01 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 04 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை.
கட்டம் 02 – காலை 9.00 மணி முதல். டிசம்பர் 08 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 11 (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை
கட்டம் 03 – காலை 9.00 மணி முதல். டிசம்பர் 15 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 18 ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 6.00 மணி வரை
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;