நானுஓயா ரயில் நிலையத்தில் துண்டிக்கப்பட்ட மேல்நாட்டுப் பாதையின் ரயில் பயணங்கள் இனி பதுளை வரை தொடரும் என இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. பாதகமான காலநிலை காரணமாக அண்மையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் தண்டவாளங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில், தண்டவாளங்கள் அகற்றப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக, ரயில் தண்டவாளத்தில் மண் மேடுகள் சரிந்து விழுந்ததால், மேல்நாட்டுப் பாதையில் ரயில் போக்குவரத்து பல சந்தர்ப்பங்களில் தடைபட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, மறு அறிவித்தல் வரை பதுளைக்கான அனைத்து ரயில் பயணங்களும் நானுஓயா ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் புதன்கிழமை (நவ.22) அறிவித்தது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;