சிறைக்காவலர் ஒருவரை தாக்கி அச்சுறுத்திய சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கண்டி, அம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. வியாழக்கிழமை (நவ.23) பிற்பகல் பெலவத்தையில் வைத்து கைது செய்யப்பட்டார். 2023 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி, மினுவாங்கொடையில் உள்ள சிறைச்சாலைக் காவலரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் குழுவொன்று துப்பாக்கி முனையில் மிரட்டி தாக்கியுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;