ஹாலிஎல, உடுவர பகுதியில் புகையிரத பாதைக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால், மலையக ரயில் பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று (22) நள்ளிரவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மேல்நாட்டுப் பாதையில் பதுளை நோக்கிச் செல்லும் ரயில்கள் மறு அறிவித்தல் வரை நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக புகையிரத பாதைகளுக்கு இடையூறாக பாறைகள் சரிந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலைக்கு மத்தியில் மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் கொழும்பு – பதுளை பிரதான வீதியின் ஹல்பே, பலாங்கொடை பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தொடர்ந்து மண்சரிவு காரணமாக பதுளை-கொழும்பு பிரதான வீதி பலாங்கொடை மற்றும் சீலகம பிரதேசத்தின் இம்புல்பேயிலும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;