பலாங்கொடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவில் வீடொன்று புதையுண்டு காணாமல் போயிருந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் சடலங்கள் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14) மீட்கப்பட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 12) பலாங்கொடை, கவரன்ஹேன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் காணாமல் போனதாகக் கூறப்படும் நான்கு பேரின் சடலங்களும் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இன்று மீட்கப்பட்டதாக அவர் கூறினார். அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இலங்கை இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் வீடொன்று மண்சரிவில் புதையுண்டதில் திருமணமான தம்பதியரும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் பின்னர் அவர்கள் சிக்கினார்களா அல்லது ஏற்கனவே வெளியேறிவிட்டார்களா என பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நிலச்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், எஞ்சிய பிரதேசவாசிகளை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;