கொழும்பில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றில் ஆசிரியர் என அடையாளம் காணப்பட்ட 24 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (நவம்பர் 14) காலை பொல்கொட ஏரியில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை (நவம்பர் 13) காலை முதல் காணாமல் போயிருந்த உயிரிழந்தவர், பாணந்துறை பகுதியின் மடகிஸ்ஸ வீதியில் பொல்கொட ஏரிக்கரையில் காணப்பட்டுள்ளார்.
பிரமிட் திட்டத்தினால் அவர் பெரும் தொகையை இழந்துள்ளதாகவும், அதன் செயற்பாடுகள் அண்மையில் இலங்கையில் இடைநிறுத்தப்பட்டதாகவும், இறந்தவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது எடுத்துச் சென்ற சூட்கேஸ் வேறொரு இடத்தில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 24 வயதுடைய இளைஞனின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;