கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் கழிவறைக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் 44 வயதுடைய அலுவலக உதவியாளர் எனவும், கம்பளை ரத்மல்கடுவ பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பளை பொலிஸார் நேற்று (13) மாலை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியதையடுத்து, கம்பளை மரண விசாரணை அதிகாரியின் உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைக்காக சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கம்பளை வலயக் கல்வி அலுவலகத்தின் மேற்படி பணியாளரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;