பலாங்கொடை – கவரன்ஹேன,வெஹிந்தென்ன பிரதேசத்தில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடை – உடவெல – ஹொரன்கந்துர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளதாக இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக 08 ஆவது கெமுனு ஹேவா படைப்பிரிவின் இராணுவப் படையினர் அந்த இடத்தை அடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மண்சரிவில் சிக்கி காயமடைந்த ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலாங்கொடை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;