நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல், மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுவான வானிலை முன்னறிவிப்பு! 11.11.2023
RELATED ARTICLES