மேல் மற்றும் தென் மாகாணங்களில் அண்மைக்காலமாக பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்திய 08 ஆயுததாரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த வருடம் கடந்த காலப்பகுதியில் 62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவங்களில் 31 பேர் கொல்லப்பட்டதுடன் 37 பேர் காயமடைந்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;