ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுயாழில் மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

யாழில் மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

0Shares

யாழ்பாணம் சோனெழு, கோப்பாய் மத்திய பகுதியில் மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை நேற்று புதன்கிழமை (08) உயிரிழந்துள்ளார். 

முத்துத்ததம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்றையதினம் விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கி விட்டார். இந்நிலையில், அவரை உடனடியாக கோப்பாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

விஷம் அருந்திய மகன் உயிர் தப்பிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments