இலங்கையில் முழு கல்வி முறையையும் டிஜிட்டல் மயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
டி.எஸ்.சேனநாயக்க கல்லூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“அடுத்த வருடத்துக்குள் முழு கல்வி முறையும் டிஜிட்டல் மயமாக்கப்படும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறைக்கான தொடர்புடைய சாத்தியக்கூறு ஆய்வுகள் டிசெம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும்.
கல்வி சீர்திருத்தங்களுடன், திட்டத்தின் முதல் கட்டமாக அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து 1A, 1B மற்றும் 1C பாடசாலைகளிலும் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை செயல்படுத்தப்படும்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;