உலகின் 7-ம் நிலையில் உள்ள துனீசிய டென்னிஸ் வீராங்கனை ஒன்ஸ் ஜாபெர் (Ons Jabeur) மகளிர் டென்னில் சங்கத்தின் கான்கன் இறுதிப் போட்டியில் வென்ற நிலையில், அந்தப் பரிசுத் தொகையின் ஒரு பகுதியை பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக வழங்குவதாக கண்ணீர் மல்க அறிவித்துள்ளார்.
மார்கேட்டா வோன்ட்ரோசோவாவை நேர் செட்டுகளில் தோற்கடித்து அவர், உணர்ச்சிப் பொங்க பேசுகையில், “இந்த வெற்றி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால். உங்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், நிஜமாக நான் மகிழ்ச்சியாக இல்லை. இந்த உலகத்தின் தற்போதைய நிலைமை எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை” என்றவர் உடைந்து கண்ணீர் உதிர்த்தார்.
அவர் கூறுகையில், “பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் தினமும் மரணமடைவதைப் பார்ப்பது மிகவும் வேதனையாகவும் இதயத்தை நொறுக்குவதாகவும் இருக்கிறது. அதனால், எனது பரிசுத் தொகையின் ஒரு பகுதியை நான் பாலஸ்தீனியர்களின் உதவிக்காக வழங்க முடிவு செய்துள்ளேன். நடக்கும் சம்பவங்களுக்கு மத்தியில் என்னால் இந்த வெற்றியால் மகிழ்ச்சியடைய முடியவில்லை.