சுகாதார சேவைகள் குழு மற்றும் கல்வி சேவைகள் குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நியமனங்களானது இன்று 02.11.2023 முதல் நடைமுறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இரண்டு வருட காலத்திற்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி , சுகாதார சேவைகள் குழுவின் தலைவராக டி.எம்.எல்.சி. சேனாரத்ன மற்றும் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹப்புகொட மற்றும் நிமல் சரணதிஸ்ஸ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்விச் சேவைக் குழுவின் புதிய தலைவராக ஜே.ஏ. ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்விச் சேவைக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, எம்.என்.கே. வீரசிங்க மற்றும் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;