ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதுகின்றன.
இலங்கை அணி 6 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 4 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. தகுதி சுற்றில் அற்புதமாக விளையாடிய அந்த அணி தற்போது தடுமாறிவருகிறது. வீரர்களின் காயம், முன்னணிவீரர்கள் உடற்தகுதியால் பங்கேற்காதது உள்ளிட்டவை அணியின் செயல்திறனை வெகுவாக பாதித்துள்ளது. அதேவேளையில் கிடைத்துள்ள வாய்ப்பை இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுத்தினால் தொடரை கணிசமான வெற்றிகளுடன் நிறைவு செய்ய முயற்சிக்கலாம்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இதுவரை விளையாடிஉள்ள 6 லீக் ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து 12 புள்ளிகளுடன் பட்டியிலில் 2-வது இடத்தில் உள்ளது. வீழ்த்த முடியாத அணியாக வலம் வரும் இந்திய அணி குறிப்பிட்டத்தக்க போராட்ட குணங்களை வெளிப்படுத்தி சாம்பியன் அணிக்கு உண்டான பண்புகளையும் வெளிப்படுத்தி உள்ளது.
12 வருடங்களுக்குப் பிறகு: உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா – இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. இதே மைதானத்தில்தான் கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் மோதின. அந்த ஆட்டத்தில் தோனி விளாசிய சிக்ஸர் உதவியுடன் இந்தியா 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதது. சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு அதே மைதானத்தில் இரு அணிகளும் மீண்டும் மோத உள்ளன.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடிய விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவர் மட்டுமே தற்போதைய அணியிலும் உள்ளனர்.
அந்த தொடரில் முக்கிய பங்களிப்பை வழங்கிய தோனி, சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், ஜாகீர்கான் ஆகியோர் ஓய்வு பெற்றுவிட்டனர். அதேவேளையில் இலங்கை அணியில் விளையாடிய எந்த வீரரும் தற்போதைய அணியில் இல்லை. ஆனால் அன்றைய இறுதிப் போட்டியில் சதம் அடித்த ஜெயர்த்தனே தற்போது இலங்கை அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
எமது இணையதளம் முகவரி :
http://colourmedia.lk/
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள.சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம் ;