புனே: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் பலம்வாய்ந்த நியூஸிலாந்து அணியை எளிதில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி 190 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
நியூஸிலாந்து அணி 167 ரன்கள் மட்டுமே எடுத்து உலகக் கோப்பை தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.