லியோ படத்தின் வசூல் நாளுக்குநாள் அதிகமாகி கொண்டே போனாலும், சில இடங்களில் சறுக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம், முதல் நாள் உலகளவில் அனைத்து இடங்களிலும் லியோ படத்திற்கு நல்ல வசூல் வரவேற்பு கிடைத்தது. ஆனால், அதற்கு அடுத்தடுத்த நாட்களில் இருந்து சில இடங்களில் லியோ படத்தின் வசூல் குறைய துவங்கியுள்ளது.
குறிப்பாக வட அமெரிக்காவில் முதல் நாள் $672K வரை வசூல் செய்த நிலையில் நேற்று ஐந்தாவது நாளில் $65K வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. இதன்மூலம் வட அமெரிக்கா பாக்ஸ் ஆபிசில் லியோ படத்தின் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. வட அமெரிக்கா மட்டுமின்றி இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா போன்ற முக்கிய இடங்களிலும் லியோ படத்தின் வசூல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கேரளாவில் கொஞ்சம் கூட வசூல் குறையாமல் ஐந்து நாட்களில் ரூ. 39 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்கின்றனர். சில இடங்களில் சரிவு ஏற்பட்டாலும் கூட பல இடங்களில் லியோ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.