ColourMedia
WhatsApp Channel
Homeஉள்நாட்டுஜனாதிபதி மாளிகையை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்

ஜனாதிபதி மாளிகையை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்

0Shares

யாழ். ஜனாதிபதி மாளிகையை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க தீர்மானம்

நல்லாட்சி அரசாங்கத்துக்கு முன்னர் காணப்பட்ட 2010 – 2015 ஆட்சிக் காலத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட யாழ். ஜனாதிபதி மாளிகையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி அலுவலகப் பிரதானி சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையில் அமைந்துள்ள இந்த ஜனாதிபதி மாளிகைக்கு 29 ஏக்கர் நிலப்பரப்பு காணப்படுகிறது. அதில் 12 ஏக்கரில் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய நிலப்பரப்பில் அப்பிரதேசங்களிலுள்ள மக்களிடமிருந்து பெறப்பட்ட காணிகளும் காணப்படுகின்றன. அவை தவிர அரசாங்கத்துக்கு சொந்தமான 12 ஏக்கர் காணியை தகவல் தொழிநுட்ப நிறுவனத்துக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 17 ஏக்கர் காணியையும், அவர்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையில் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தக் காணி கடற்படையினர் வசம் காணப்படுகிறது. இதனை இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திடுவதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments