பொதுவாகவே மூன்று விதமான சூரிய கிரகணம் நடக்கிறது.
முழு சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் போது சூரியனை நிலவு மறைக்கிறது. இதுதான் கிரகணம். சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும் சில இடங்களில் இந்த முழு சூரிய கிரகணம் தோன்றும். சூரியன் ரொம்ப பெரியது நிலா எப்படி மறைக்க முடியும் என்று கேட்கலாம். நம்முடைய பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைப்பது போல தோன்றும். முழு சூரிய கிரகணம் சூரிய கிரகணத்தின் முதல் வகை முழு சூரிய கிரகணம்.
இந்த நிகழ்வு நடக்கும் போது சந்திரன் பூமிக்கு மிக அருகில் ஒரே நேர் கோட்டில் இருக்கும். சூரியனை விட சந்திரன் மிக மிக சிறிய அளவுடையது. ஆனால் பூமிக்கு அருகில் இருப்பதால் சூரியனை முழுவதுமாக மறைத்து விடுகிறது. இதனால் சூரியனை முழுவதுமாக பூமியிலிருந்து பார்க்க முடியாத நிலை மற்றும் சூரிய ஒளி பூமியை அடையாமல் முழு இருட்டாக இருக்கும். இரவு போல காட்சி அளிக்கும்.
பகலில் சூரிய வெளிச்சம் தெரியாமல் போனால் மனிதர்களுக்கு குழப்பம் வராது. ஆனால் விலங்குகள், பறவைகளுக்கு இடையே சில குழப்பங்கள் வரும். பூத்த மலர்கள் கூட மறுபடியும் வாட ஆடம்பித்து விடுமாம். ஓநாய்கள் ஊளையிடும். பறவைகள் தங்களின் கூடுகளுக்கு திரும்பி போக ஆரம்பித்து விடும். பகுதி சூரிய கிகரணம் இரண்டாவது வகை சூரிய கிரகணம் பகுதி சூரிய கிரகணம் ஆகும். பகுதி சூரிய கிரகணத்தில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரக்கூடிய சந்திரன் சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. இதன் காரணமாக, சூரியனின் ஒரு பகுதி சந்திரனால் மறைக்கப்படும். இதில் சூரியனின் ஒரு மிகச் சிறிய அல்லது ஒரு பகுதியை மறைக்கும் அதனால் பகுதி சூரிய கிரகணம் என்று குறிப்பிடப்படுகிறது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் சில நேரங்களில் நிலவினால் சூரியனை முழுவதுமாக மறைக்க முடியாது. நிலவு மறைக்கப்பட்ட பகுதி கறுப்பாகவும் அதன் விளிம்புகள் நெருப்பு வளையம் போலவும் தோன்றும் இதுதான் கங்கண சூரிய கிரகணம், நெருப்பு வளைய சூரிய கிரகணம் இதுதான் கடந்த டிசம்பர் 26ஆம் தேதியும், ஜூன் 21ஆம் தேதியும் நிகழ்ந்தது. வளைய சூரிய கிரகணத்தில், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, அது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருகிறது, அதாவது சூரியனின் மையத்தில் சந்திரன் வருவதால் அதன் நிழல் பகுதி மறைக்கும். சந்திரனால் மறைக்கப்படாத பகுதிக்கு வெளியே உள்ள பகுதி ஒளிரும் என்பதால் ஒரு வட்டம் அல்லது வளையமாக தோன்றுகிறது. இப்படி நெருப்பு வளைய வடிவத்தில் வரக்கூடிய சூரிய கிரகணத்தை வருடாந்திர சூரிய கிரகணம் என்று சொல்கிறார்கள்.