விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு கொழும்பு நகரில் ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகளில் பரிமாறப்படும் உணவு குறித்து ஆராய்வதற்கு மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கொழும்பு மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவிக்கையில்,
கொழும்பு நகரில் ஏற்பாடு செய்யப்படும் தானசாலைகள் குறித்து தற்சமயம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு நகருக்குள் மட்டும் சுமார் 100 தானசாலைகள் ஒழுங்கு செய்யப்பட இருப்பதாகவும், இவற்றின் பெரும்பாலான தானசாலைகள் ஏற்கனவே கொழும்பு மாநகரசபையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக என்று தெரிவித்தார்.
தானசாலைகளை பதிவு செய்வதற்கு தேவையான விண்ணப்பப்படிவங்களை கொழும்பு மக்கள் தொடர்பாடல் சுகாதாரத் திணைக்களத்திலோ அல்லது அதற்குரிய இணையத்தளத்தில் இருந்தோ பெற்றுக் கொள்ளலாம் என்று திரு விஜயமுனி மேலும் தெரிவித்தார்.