குருணாகல், அலவ்வ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் புத்தாண்டு தினத்தன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்று தனது தந்தையை தாக்கி வீட்டில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் வலஸ்முல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனையடுத்து 15 ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் சந்தேக நபர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருணாகல் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் சந்தன அபேசிங்கவின் பணிப்பின் பேரில், முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.