இந்த கிரகணம், இங்கையில் தென்படாது என்றும் மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசிய தீவுகளில் உள்ள சில பகுதிகளுக்கு நன்றாக தென்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலக சனத்தொகையில் 8.77 வீதமானவர்களுக்கு மட்டுமே சூரிய கிரகணம் தெரியும் எனவும், இலங்கை மற்றும் உலகின் பல பகுதிகளுக்கு இது நேரடியாகத் தென்படாது எனவும் பேராசிரியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 20 ஆம் திகதி ஏற்பட உள்ள இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி, இந்து சமுத்திரத்தில் காலை 7.04 மணிக்கு கிரகணம் ஆரம்பித்து பசிபிக் சமுத்திரத்தில் 12.29 மணிக்கு நிறைவடையும்.
கலப்பின கிரகணங்கள் மிகவும் அரிதானவை. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நவம்பர் 03 2013 அன்று கலப்பு சூரிய கிரகணம் ஏற்பட்டது. மற்றும் அடுத்த கலப்பின சூரிய கிரகணம் நவம்பர் 2031 இல் நிகழும்.
இந்த கிரகணத்தை இலங்கையில் காண முடியாவிட்டாலும், பல இணையத்தளங்கள் மூலம் இதனை நேரடியாக அவதானிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.