ColourMedia
WhatsApp Channel
Homeதொழில்நுட்பம்உங்கள் பாஸ்வேர்ட் திருடப்படலாம்.. செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் ஷாக்

உங்கள் பாஸ்வேர்ட் திருடப்படலாம்.. செயற்கை நுண்ணறிவு கொடுக்கும் ஷாக்

0Shares

சமீபத்தில் கிடைத்த ஒரு அறிக்கையின் படி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் பாஸ் ஜென் எனப்படும் ஒரு பிளாட்பார்ம் நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டை கண்டறியும் வேலையை செய்கிறது. வெறும் 60 நொடிகளுக்கு உள்ளாகவே நம்முடைய 51% பாஸ்வேர்டை இது கண்டறிந்து விடுகிறது. ஒரு மணி நேரத்தில் 65% பாஸ்வேர்டையும், ஒரு நாளைக்குள் 71% பாஸ்வேர்டையும் கண்டறிகிறது. 81% பாஸ்வேர்டை கண்டறிவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கிடைத்த ஒரு அறிக்கையின் படி, செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் பாஸ் ஜென் எனப்படும் ஒரு பிளாட்பார்ம் நாம் பயன்படுத்தும் பாஸ்வேர்டை கண்டறியும் வேலையை செய்கிறது. வெறும் 60 நொடிகளுக்கு உள்ளாகவே நம்முடைய 51% பாஸ்வேர்டை இது கண்டறிந்து விடுகிறது. ஒரு மணி நேரத்தில் 65% பாஸ்வேர்டையும், ஒரு நாளைக்குள் 71% பாஸ்வேர்டையும் கண்டறிகிறது. 81% பாஸ்வேர்டை கண்டறிவதற்கு ஒரு மாதம் எடுத்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வலுவான வித்தியாசமான பாஸ்வேர்ட் : எப்போதுமே நீங்கள் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கும் போது எழுத்துக்களின் அளவுகள், எண்கள் மற்றும் குறியீடுகளை ஒன்றிணைத்து கணிக்க முடியாத வலுவான பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். மிக எளிதாக கணிக்கும் வகையில் அமைந்து பாஸ்வேர்டுகளான பிறந்த தேதி, நமது பெயர் போன்றவைகளை பாஸ்வேர்டாக அமைப்பதை தவிர்ப்பது நல்லது.

கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜர் : உங்களது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கும் கூகுள் பாஸ்வேர்ட் மேனேஜரை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இவ்வாறு நீங்கள் பயன்படுத்தும் போது உங்களது அனைத்து ஆன்லைன் கணக்குகளுக்கான பாஸ்வேர்டு அனைத்தும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படும். எனவே அனைத்து பாஸ்வேர்டுகளுக்கும் மாஸ்டர் பாஸ்வேர்ட் ஒன்றை மட்டுமே நீங்கள் நினைவு கொண்டால் போதுமானது

இரு காரணி அங்கீகாரம் : (two step verification) இரு காரணி அங்கீகாரம் எனப்படும் முறையில் உங்களது ஆன்லைன் கணக்குகளுக்கும் பாஸ்வேர்டுக்கும் மற்றுமொரு கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது. இதன் மூலம் நீங்கள் உங்களது பாஸ்வேர்டை உள்ளீடு செய்தாலும் கூட, அதனை உறுதி செய்யும் வகையில் உங்களது மொபைலுக்கு ரகசிய குறியீடு ஒன்று அனுப்பப்படும் அல்லது நீங்கள் லாகின் செய்ததை உங்கள் மொபைலில் ஓகே செய்தால் மட்டுமே உங்களது அக்கவுண்ட் ஓபன் ஆகும்.

வி பி என் பயன்படுத்துவது : இணையத்தின் மூலம் பரிமாறப்படும் தகவல்கள் அனைத்தையுமே விபிஎன் ஆன் செய்து செய்யும் போது, நமது ஐ பி அட்ரஸ் ஆகியவற்றை இவை மறைத்து விடுகிறது. இதன் காரணமாக ஹேக்கர்கள் மற்றும் மற்றவர்கள் உங்களது இணைய செயல்பாடுகளை கண்டறிவது தடை செய்ய முடியும்.

செக்யூரிட்டி அப்டேட்ஸ் : எப்போதுமே உங்களது இயங்குதளம், வெப் பிரவுசர் மற்றும் இதர சாஃப்ட்வேர்கள் அனைத்தையுமே அவ்வப்போது அப்டேட் செய்து வருவதன் மூலம் ஆன்லைன் தாக்குதல்கள் மற்றும் ஹேக்கிங் செய்வதிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

பிஷ்ஷிங் ஆபத்துகள் : பிஷ்ஷிங் எனப்படும் பாஸ்வேர்டு மற்றும் தகவல்களைத் திருடும் குறுஞ்செய்திகள், இமெயில்கள் ஆகியவற்றிலிருந்து எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் அவ்வப்போது உங்கள் கணக்குகளில் சந்தேகத்திற்கு இடம் தரக்கூடிய செயல்பாடுகள் ஏதேனும் நடந்துள்ளதா என்பதை சரி பார்த்துக் கொள்வதும் நல்லது.

0Shares
RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments