இலங்கையின் வருடாந்த நெல் அறுவடையயை அதிகரிக்கும் நோக்குடன், எதிர்வரும் 10 வருடங்களுக்குள் ஒரு ஹெக்டயரில் இருந்து பெறும் நெல் அறுவடையை 5.5 மெட்ரிக் டொன் வரை அதிகரிக்க விவசாயத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய, 3 வருடங்களுக்குள் 4.7 மெட்ரிக் டொன் வரையும், 5 வருடங்களுக்குள் 5.1 மெட்ரிக் டொன் வரையிலும், 10 வருடங்களுக்குள் 5.5 மெட்ரிக் டொன் வரையிலும் நெல் அறுவடையை அதிகரிக்கும் நோக்கில் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலனீ பரசுராமன் தெரிவித்துள்ளார் .