ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் திறக்குமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியம் பத்தரமுல்ல கல்வி அமைச்சுக்குள் நுழைந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று பேரணியாக வந்து கல்வி அமைச்சுக்குள் பிரவேசித்து வளாகத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.