சிவ சிவ என்றிட தீவினை யாவும் தீரும்
இன்நாளில்
எந்த துன்பம் வந்தாலும் சிவனை நினைத்தால் வந்த துன்பம் வழிமாறிப் போகும். ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியான எல்லாம் வல்ல அந்த சிவனுக்கென்ற மகத்துவமான ராத்திரியை கொண்ட நாள்தான் இந்த சிவராத்திரி.இந்துக்களின் முழுமுதற்கடவுளான சிவனை நினைத்து சிவனுக்காக அனுஷ்டிக்கின்ற இந்த சிவராத்திரி நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி என ஐந்து வகைப்படும். மாதந்தோறும் சிவராத்திரி விரதம் வந்தாலும் மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசியில் வருகின்ற சிவராத்திரி மிகவும் விஷேடமான மகா சிவராத்திரி எனப்படுகிறதுசிவராத்திரி பல சிறப்புகளை கொண்டது என்பதனால் அன்றைய தினம் விரதம் இருந்து கண் விழித்து ஈசனை வழிபட்டால் பல நன்மைகளை பெறலாம் மகா சிவராத்திரியன்று விரதம் இருந்தால், மூன்று பிறவியில் செய்த பாவங்கள் முழுவதுமாக நீங்கும் என்பது ஐதீகம். மனக் கவலைகள், உடல் மற்றும் மன ரீதியான நோய்கள், வறுமை நிலை ஆகியவை நீங்கி, வாழ்வில் எல்லா நிலைகளிலும் மேன்மை பெறுவதற்கு மகா சிவராத்திரி விரதம் இருந்தால் போதும்.
அணைக்கருக்கும் மஹா சிவராத்திரி வாழ்த்துக்கள்