பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை இராஜினாமா செய்வதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்றில் இன்று (20) அறிவித்தார்.
எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தாம் கொழும்பு மாநகர மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுத் தீர்மானத்திற்கு அமைவாக கொழும்பு மாநகர சபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடுவதாக முஜிபுர் ரஹ்மான் கூறினார்.