வாரியபொல, வெலவ பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற மோதலில் 33 வயதுடைய நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கொல்லப்பட்டவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த “எட்டிகுப்பா” என அழைக்கப்படும் சமரு ருவன் பத்திரன என்பதுடன் மோதலின் போது அவரது சகோதரர், மூத்த சகோதரி மற்றும் மற்றுமொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.