தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்னும் இரண்டு நாட்களில் பணிகள் நிறைவடையும் என்றும் அதன்பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது