சிரேஸ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவின் 14 ஆவது நினைவு தினம் மட்டக்களப்பில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் , மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது