நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள இச் சந்தர்ப்பத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் அது உலக சாதனையாக கருதப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த தருணத்தில் தேர்தல் நடத்துவதானால் பணம் அச்சடிக்க வேண்டி நேருமென்றும் அவ்வாறு பணம் அச்சடித்து தேர்தல் நடத்தப்பட்டால் அது இலங்கையின் உலக சாதனையாகவே அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.