தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்திற்கு இன்று மாலை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
இரா. சம்பந்தன் நாட்டிற்காக ஆற்றிய சேவைக்காக அவரை கௌரவித்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்தது