சமுர்த்தி உதவிகளை வழங்குவதற்கு பொருத்தமான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான தெளிவான மற்றும் வெளிப்படையான வழிமுறை இல்லாததால் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன.
மானியம் தேவைப்படாத பலர் நீண்டகாலமாக சமுர்த்தி மானியத்தை பெற்று வருவதனால் இப்பிரச்சினை நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சமுர்த்தி மானியத்திற்கு தகுதியான பலர் அந்த வாய்ப்பை இழந்துள்ளதுடன், சுகாதார திணைக்களத்தினால் இனங்காணப்பட்ட போசாக்கு குறைபாடுள்ள குழந்தைகளைக் கொண்ட சில வறிய குடும்பங்கள் சமுர்த்தி மானியப் பட்டியல்களில் உள்வாங்கப்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், சமுர்த்தி மானியம் பெற தகுதியான பயனாளிகள் மற்றும் சமுர்த்தி மானியம் பெற தகுதியற்ற நபர்களை அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்