தற்பொதுழுது நிலவும் வெப்பத்துடன் கூடிய காலநிலை காரணமாக திறந்தவெளியில் மேற்கொள்ளப்படும் பணிகளை கூடியவரையில் தவிர்த்துக்கொள்ளுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
கடும் வெப்பத்தின் காரணமாக சிறுவர்கள் பாதிக்கக்கூடிய நிலை இருப்பதாக விளையாட்டுத்துறை வைத்திய அதிகாரி லால் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 இராணுவ வீரர்கள் மயக்கமுற்று நேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கு அதிக வெப்பமே காரணமாக இருக்கும் என்று வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.
அதிக வெப்பத்தின் காரணமாக இவ்வாறான அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ளவேண்டுமாயின் பகல் வேளைகளில் ஆகக்கூடுதலாக நீரை பருக வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.