ஜோர்தானில் இருக்கும் இந்நாட்டுப் பணிப்பெண்களை நாட்டுக்கு அழைத்துவர அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரபுக்களின் பிள்ளைகளை நாட்டுக்கு அழைத்து வருதற்கான பல விமானங்கள் அனுப்பப்பட்டன.
ஆனால் இந்நாட்டுக்கு அந்நிய செலாவணியைப் பெற்றுக் கொடுக்கும் சாதாரண பெண்களை அழைத்துவருவதற்கு தற்போதைய அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக இதே ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாட்டிலிருந்த தொழிலாளர் களை மாலை அணிவித்து அழைத்து வந்தார்கள்.
தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது தொடர்பிலே ஆளும் தரப்பினர் அக்கறை கொள்கின் றனர்.
ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் அமை திகாப் பதை நிறுத்திவிட்டு, ஜோர்தானில் இருக்கும் இலங்கை பணிப்பெண்களை நாட்டுக்கு அழைத்துவர எவ்வாறான நடவடிக் கையை மேற்கொள்ளவுள்ளார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டும் என ஹிருணிகா தெரிவித்தார்.