சஜித் அணிக்கு இன்றும் காத்திருக்கிறது
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 115 உறுப்பினர்களுக்கான கடிதங்கள் இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளன.
சஜித் பிரேமதாஸ தலைமையிலான மக்கள் சக்தி கட்சியின் கீழ் பொதுத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த 54 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நீக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலில் உள்ளனர்.
இதேவேளை தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்காத உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றுகூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின்போது இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.