தாம் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக, பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, நாளை (29) முற்பகல் 7.30 மணி முதல் மீண்டும் பணியில் இணையப் போவதாக, அச்சங்கம் அறிவித்துள்ளது.