இன்னும் ஐந்து வருடங்கள் இவ்வாறே பயணிப்பதா, இல்லை ஐக்கிய தேசிய கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவதாக என்பதை தீர்மானிக்க வேண்டும். தற்போதைய அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்வைத்த திட்டங்கள் தொடர்பாக தற்போது கதைப்பது கூட இல்லை. ஐக்கிய தேசிய கட்சியால் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை செய்ய முடியும்
அதேபோல், விவசாயிகளின் காணி உரிமைப்பத்திரங்களை கையளிப்பதற்கான சட்டத்திருத்தத்தை செய்து, காணி உரிமைகளை பெற்றுக்கொடுப்பதோடு, சகல விதமான உர வகைகளையும் இறக்குமதி செய்வதற்கான அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்படும் ” என்று பொலனறுவையில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.