அன்டன் பாலசிங்கத்தின் செருப்பிற்கும் பெறுமதியற்றவர் தான் சுமந்திரன். ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் விடுதலை புலிகளின் போராட்டத்தை உலகறியச் செய்த ஒரு இராஜதந்திரி என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி வேட்பாளர் தியாகராசா ஞானேந்திரனை ஆதரித்து கட்சி பணி மனை திறப்பு விழா நேற்றைய தினம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்