சென்னை ஐஐடியில் உள்ள விடுதி மாணவர்கள், தங்களது உடைமைகளை இன்னும் ஒரு சில தினங்களில் காலி செய்து கொள்ளுமாறு நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையம் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியையும் கொரோனா வார்டாக மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ஐஐடி மாணவர் விடுதியும் கொரோனா வார்டாக மாற்றுவதற்கு, மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட இருக்கிறது