அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துவோருக்கான விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அதிவேக நெடுஞ்சாலையின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவிக்கையில் சாரதிகளின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின்இ வெளியேறும் வாயிலை அண்மித்த வாகனங்களை பத்து விநாடிகளுக்குள் வெளியேற்ற முடியும் என்று தெரிவித்தூர்.
வெளியேறும் வாயிலை நெருங்குவோர் பற்றுச்சீட்டையும்இ உரிய கட்டணத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பதன் மூலம் இந்தத் தாமதத்திற்கு தீர்வு காண முடியும். அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் வாகனத்தை நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் மாத்திரமே வாகனத்தை செலுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.