நிதி நிறுவனங்கள் மற்றும் லீசிங் நிறுவனங்களில் இடம்பெறும் முறைகேடுகள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் குழு ஒன்றை நியமித்துள்ளார்.
ஜனாதிபதியின் சட்டத்துறை பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹணதீர இக்குழுவின் தலைவராக செயற்படுவதுடன், இலங்கை மத்திய வங்கியின் சட்டத்துறை பணிப்பாளர் கே.ஜி.பி.சிறிகுமார மற்றும் மத்திய வங்கியின் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களை முகாமைத்துவம் செய்யும் பிரிவின் பணிப்பாளர் ஜே.பி.கம்லத் ஆகியோர் ஏனைய உறுப்பினர்கள் அவர்.
குறிப்பாக மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளப்படும் பினான்ஸ் மற்றும் லீசிங் வழங்கும் நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ள நிதி நிறுவனங்களினால் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றபோது இடம்பெறும் சமூகம் அங்கீகரிக்காத செயற்பாடுகள் மற்றும் இவை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்படுகின்றன என்பது பற்றியும் கண்டறிந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு அதன் அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுடன், வங்கித்துறை மற்றும் சட்டத்துறை நிபுணர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களை தொடர்புகொண்டு இந்த அறிக்கையை 14 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு மத்திய வங்கி ஆளுநரினால் குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது.