பொலன்னறுவை மாவட்டத்தில் ” 2019 ஆண்டு பல்கலைக்கழக வரம் பெற்ற மாணவ மாணவிகளை கௌரவிக்கும் வைபவம் ஒன்றே இவ்வாறு தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளின் தலையீட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த வைபவத்தில் கலந்து கொண்ட பின்னர் தேர்தல் ஆணைக்குழுவின் உத்தரவை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து அங்கிருந்து வௌியேறினார்.
இதன்போது தேர்தல் ஆணைக்குழுவின் பொலன்னறுவை அலுவலகத்தின் அதிகாரிகள் சிலர் கலந்து கொண்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி வைபவத்தில் இருந்து வௌியேறும் வரையில் அவர்கள் அங்கு இருந்ததாக செய்தியாளர் தெரிவித்தார்.