இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் சுழல் ஜாம்பவானாக திகழ்ந்த முத்தையா முரளிதரன், முறையற்ற விதத்தில் பந்து வீசியதாக குற்றஞ்சாட்டிய நடுவர் ரொஸ் எமெர்சனையும், அந்நாள் தலைவரான அர்ஜுனவையும் மறக்க முடியாது. இந்த சந்தர்ப்பத்தில் என்ன நடந்தது என பல ஆண்டுகள் கழித்து உண்மையை உலகறியச்செய்துள்ளார் எமெர்சன். 1999 ஆம் ஆண்டில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் முத்தையா முரளிதரன் வீசிய பந்து, முறையற்ற பந்து (நோ போல்) என அறிவித்து அப்போது பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்தார்.
இது குறித்து பிரபல ஊடகமொன்றுக்கு செவ்வியொன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘அந்தப் போட்டியின் போது, முரளிதரன் உண்மையிலையே நோபோல் வீசவில்லை. அது திட்டமிட்ட ஒரு சதி. அவுஸ்ரேலியா கிரிக்கெட் சபையின் அதிகாரியொருவர் அவ்வாறு தன்னை நடந்து கொள்வதற்கு பணித்தார் எனவும் குறித்த அதிகாரியின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை’ என கூறினார்.
1996ல் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் பிற நடுவரால் முரளிக்கு நோ போல் வழங்கப்பட்டதையும் எமெர்சன் சுட்டிக்காட்டினார். சில நாட்களின் முன்னர், அவுஸ்திரேலியா கிரிக்கட்டின் உன்னதத்தை பேணும் விதமாக முக்கிய வீரர்களுக்கான தடையை வழங்கியிருந்தது.