நேற்றைய தினம் சனிக்கிழமை(24) நீர்கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி தொகுதி அமைப்பாளர் ரொய்ஸ் விஜித பெர்னாந்து அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாடு அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
அகங்கு கருத்து தெரிவித்த ரொயிஸ் பெர்னாந்து அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை(23) நீர்கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவிக்கன வாக்கெடுப்பு இடம்பெறாது. இதில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினரால் மேயர் தெரிவாகியுள்ளார் இதற்க்கு அதரவு தெரிவித்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 5உறுப்பினர்கள் கருப்பு பணத்திற்கும், போதைப்பொருள் விட்ற பணத்திற்கும் விலைபோய் உள்ளதாக தெரிவித்தார்.
கடந்த தேர்தல்கள் அனைத்திலும் நீர்கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியே அதிகமாக வெற்றி பெற்றுள்ளது இம் முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் ஐக்கிய தேசிய கட்சியே அநேகமான தொகுதியில் வெற்றி பெற்றது இருப்பினும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தொகுதி அமைப்பாளர் தமக்கு அதரவு வழங்கிய போதிலும் ஏனைய 5உறுப்பினர்களை கருப்பு பணத்திற்கு வாங்கி உள்ளார்கள் அப்படி கூறுவதற்கு காரணம் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிலரையும் தமக்கு அதரவு தருமாறு பணம் தருவதாக கூறிய குரல் பதிவு தம்மிடம் உள்ளதாக கூறினார்.
அதனால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் 5பேரும் போதைப்பொருள் விட்ற பணத்திற்கும் விலைபோய்யுள்ளார்கள். அதனால் இந்த அடியானது தோல்வியானது ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது அல்ல நீர்கொழும்பு மக்களுக்கு கிடைத்த தோல்வியாக நான் கருதுகின்றேன்.
இந்த மேயர் தெரிவானது நீதியான தெரிவு அல்ல உண்மையான மேயர் நானே மக்களால் தேர்வு செய்யபட்ட மேயர் நானே என்று தெரிவித்தார் இருப்பினும் கருப்பு பணத்தால் அவைகளை மூடி அவர்கள் அவர்களுக்கு தேவையானவர்களை மேயராக தெரிவு செய்துள்ளனர்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கும் பெரும்திரளான வாக்குகள் வழங்கியதும் நீர்கொழும்பு மக்களே அதன் பின் பாராளுமன்ற தேர்தலில் அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கும் பெரும்திரளான வாக்குகள் வழங்கியதும் நீர்கொழும்பு மக்களே என்று தெரிவித்தார்
தம்மிடம் இருப்பதாக கூறிய குரல் பதிவு எதுவும் ஊடகங்களுக்கு காண்பிக்கவில்லை தேவையான போது வெளியிடுவதாக தெரிவித்தார் .
https://www.youtube.com/watch?time_continue=1&v=u3eu_AgcNyc